அகதிகளாக அவுஸ்ரேலியா செல்லுதல்


கடந்த பல மாதங்களாக இலங்கையிலிருந்து அவுஸ்ரேலியாவில் அகதி தஞ்சம் கோரும் நோக்குடன் பயணமாகும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அதேவேளை அந்த நோக்கில் பயணிப்பவர்களின் பிரயாணம் மிகவும் கடிமானதாகவும் ஆபத்தானதாகவும் இருப்பதினால் அவர்களது இலக்கை அடையமல் தங்கள் பயணங்கள் இடைவழியிலேயே முடிந்து போகின்ற சோகக் கதைகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.

அகதி தஞ்சம் போருவது ஒரு தனிமனிதனுடைய அடிப்படை உரிமையென்றாலும் அவுஸ்ரேலியாவுக்கு தஞ்சம் கோரி புறப்படுவதற்கு முன்பு அறிந்திருக்க வேண்டிய சில தகவல்களை இந்தப் பகுதியில் தருகின்றோம்

 

அவுஸ்ரேலியா  நன்கு திட்டமிடப்பட்ட சட்டபூர்வ குடிவாளார் வருகையை ஊக்குவிக்கின்ற ஒரு நாடாகும். 1900ம் ஆண்டுக்கு முனபே இலங்கையர்கள் தொழிலாளர்களாக  அங்கு குடிபெயர்ந்துள்ளனர். 1991ம் ஆண்டு அவுஸ்ரேலியாவில் எடுக்கப்பட்ட மக்கள் சனத்தொகை கணக்கெடுப்பில் சுமார் 600 பேராக இருந்த  இலங்கையாகளின் சனத்தொகை 2006 ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் சுமார் 70 ஆயிராமாக அதிகரித்து இருந்தது.

 

1983ம் ஆண்டு முதல் இலங்கையர்கள் அகதிகளாக அவுஸ்ரேலியாவிற்கு அகதி தஞ்சம் கோரி சென்றாலும் 2009ம் அண்டு இலங்கையில் ஏற்பட்ட யுத்த முடிவுகளினால் அவுஸ்ரேலியா அரசு இலங்கை அகதிகளை ஏற்றுக்கொள்வதில் கட்டுபாடுகளை விதித்து வந்துள்ளது.

 

2009ம்ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை வெளிநாட்டு அமைச்சர் திரு ரோகித்த போலகலகம அவர்களுடன் அவுஸ்ரேலியாவின் வெளிநாட்டமைச்சர் திரு ஸ்ர{பன் ஸ்மித் அவர்களும்  தங்களது இரண்டு நாட்டு அரசாங்கங்களும்  ஒண்றுசேர்ந்து இலங்கை அகதிகள் அகதி தஞ்சம் கோரும் நோக்குடன் அவுஸ்ரேலியாவுக்கு செல்வதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பான  ஒப்பந்தம் ஒன்றில்  கொழும்பில் கையெழுத்திட்டர்கள். இந்த ஒப்பந்த அடிப்படையில் இலங்கையின் கடற்பரப்பிலோ அல்லது ஆகாய மூலமாகவோ அவுஸ்ரேலியா செல்ல முயற்சிப்பவர்களை தங்களுடைய நாட்டு எல்லையிலேயே எல்லா பலத்தையும் அதிகாரத்தையும் பாவித்து தடுத்துவிடவேண்டுமென்பதே.

 

அண்மைக்காலங்களில் கிழக்கு மாகானத்திலிருந்தும்  இலங்கையின் தெற்கு மகான பகுதிகளிலுருந்தும் சிறு படகுகளில் அவுஸ்ரேலியா நோக்கி புறப்பட்ட பலரை பாதுகாப்பு படையினர் கைது செய்திருக்கின்றார்கள்.

 

இவ்வாறான தடைகளையும் கடந்து ஏற்கனவே அவுஸ்ரேலியா நோக்கி கடல்வழியாக சென்ற பலர் தங்கள் பாதி வழியில் படகுகள் மூழிகியதால் இறந்நதவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இவ்வாறு மரணித்தவர்கள் அல்லது காணாமல் போனவர்களின் சரியான எண்ணிக்கையோ அல்லது அவர்களது அடையாளங்களையோ அறிந்துகொள்ளமுடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

 

அவுஸ்ரேலியாவுக்கு அகதிகளை படகுகள்மூலம் கொண்டுசெல்வதற்காக பெரும் பணத்தை பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக மக்களை நாட்டுக்குள் கூட்டிச்செல்லும் பல முகவர்கள் அவர்களின் பயணம் உரிய நோக்குடன் இடம்பெறாத சந்தர்ப்பங்களில் அவர்களை நம்பிவந்தவர்களையெல்லாம்  நடுவழியில் நிர்க்கதியாக சென்றுவிட்டு தலைமறைவாகின்ற சம்பவங்கள் பெருவாரியாக இடம்பெறுகின்றன. இவ்வாறு நிர்க்கதியாக விடப்பட்டவர்கள் தங்களுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் மலேசியா- தாய்லாந்து- போன்ற நாடுகளில் பாதைகளில் அலைந்து திரிவதை நாம் நேரில் காண்கிறோம்.

 

அண்மையில்  சர்வதேச ஊடகமொன்றுக்கு தங்கள் வேதனைகளை வெளியிட்ட பல இலங்கையர் தங்களது உறவுகள் பலரை அவுஸ்ரேலியவில் அகதி தஞசம் கோருவதற்கு சில முகவர்கள் கூட்டிச் செனறதாகவும் பல வருடங்களாகியும் அவர்கள் பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லையென தெரிவித்துள்ளர்கள். அவர்களில் சிலர் தங்களுடைய உறவுகள் பற்றி அவுஸ்ரேலிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு விசாரித்தாதாகவும் அவர்கள் பற்றிய விபரங்கள் தங்களிடம் இல்லையென்று தெரிவித்ததாகவும் கூறினார்கள்.

 

இலங்கையிலிருந்து ஆவுஸ்ரேலியாவிற்கு கடல்வழியாக பயணிக்கும் பாதை மிகவும் பயங்கரமானதாக இருந்தாலும் பல இலங்கையர்கள் மாத்திரமின்றி வேறுபல நாடுகளிலிருந்தும் இவ்வகையான பயங்கரமான வழியை தெரிவு செய்கின்றார்கள். அவுஸ்ரேலியாவிலுள்ள அகதிகள் சபையின் நிர்வாக இயக்குணர் திரு போல் பவர் அவர்கள் இந்த பயணங்கள் பற்றி  இவ்வாறு கூறுகின்றார்.

 

‘ அவுஸ்ரேலியாவிற்கு அகதி தஞ்சம்கோர்p வருபவர்கள் இங்குள்ள வசதியான வாழ்க்கைமுறையை தேர்ந்தெடுப்பதற்காக வருவதில்லை. அவுஸ்ரேலியாவிற்கு கடல்மார்க்கமாக பயணிப்பவர்கள் தங்கள் உயிருக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் பற்றி நன்கு தெரிந்திருந்தும் இங்கு வருகின்றார்களென்றால் அவர்கள் தங்களின் நாடுகளில் ஏற்படக்கூடிய உயிராபத்திலிருந்து தப்பிக் கொள்வதற்காகவே வேறு வழிகளின்றி இந்த வழியை தெரிவு செய்கிறார்கள்.’

 

அவுஸ்ரேலியா ஐக்கிய நாடுகளின் அகதிகள் சாசனத்தில் கையெழுத்திட்டு அகதிகளுக்கான சர்வதேச சட்டத்திற்கு மதிப்பளிக்கின்ற வகையில் அவுஸ்ரேலியாவில் அகதி தஞசம்கோரி வருபவர்களை அவுஸ்ரேலியா சட்டங்களுக்குட்பட்டவiயிலும் சர்வதேச சட்;டஙகளுக்கு ஏற்றவகையிலும் மனிதாபிமான அடிப்படையில் நடாத்தப்படவேண்டியதற்கான கடப்பாட்டையுடையது. இந்த அடிப்படையில் ஒவ்வொரு  தனிப்பட்டவருடைய அகதி தஞ்சக்கோரிக்கையையும் பூரணமாக பரிசீலைனை செய்து அது நிராகரிக்கபடு;ம் பட்சத்தில் அவுஸ்ரேலியா அரச தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்ற தீர்ப்பை நாடுகின்ற உரிமை ஒவவொருக்கும் சட்டத்தின்மூலம் உறுதிபடுத்துப்பட்டுள்ளது.

 

அண்மையில் வெளிவந்த புள்ளிவிபர அடிப்படையில் அவுஸ்ரேலியாவில் கடந்த 10 வருடகாலத்தில் பல நாடுகளிலிருந்தும் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேறப்டவர்கள் தஞ்சம் கோரியிருபபதாகவும் அதில் 21அயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு பலதரப்பட்ட வழிகளில் இருப்பிட அனுமதியை அவுஸரேலிய அரசு வழங்கியுள்ளது எனவும் தெரிகிறது.

 

இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பினன்ர் 2009 முதல் 2010 வரையிலான ஒரு வருட காலப்பகுதியில இலங்கையர்கள்; சுமார் 650க்கு மேற்பட்டவர்கள் அகதி தஞ்சம் கோரியதாகவும் அவர்களில் 500 பேருக்கு இருப்பிட அனுமதி வழங்கப்படிருப்பதாகவும் புள்ளி விபரங்கள் தெரியப்படுத்துகின்றன.

 

கிறிமஸ்தீவிலுள்ள அகதிகளை தடுத்து வைக்கும் முகாமானது அவுஸ்ரேலியாவிற்கு அகதி தஞ்சம்கோரி வருபவர்களை தடுத்து வைக்கும் இடமாக  அரசாங்கம் நிர்மானித்து வைத்துள்ளது. இந்த தீவானது மேற்கு அவுஸ்ரேலியாவிலிருந்து சுமார் 1200 மைல்களுக்கு அப்பால் இருக்கின்றது. அகதி தஞ்சம் கோருவோரின் விண்ணப்பங்கள் பரிசீலைணை செய்யபட்டு இருப்பிட அனுமதி வழங்கும்வரை அவர்கள் இந்து முகாமிலே தங்க வைக்கப்படுகின்றனர்.

 

பசுபிக் சமுத்திரத்தில் ஒரு ஒதுக்குப்புறத்தில் இருக்கும் இந்த தீவில் அமைந்துள்ள அகதிகள் முகாமில் அங்கு தடுத்துவைக்கப் பட்டிருப்பவர்களின் மனநிலை மோசமடைந்து பல தற்கொலைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

 

அவுஸ்ரேலியாவிற்கு அகதி தஞ்சம் கோரும் நோக்குடன் படகுகளில் வந்திறங்குபவர்களை அதிகமான சந்தர்ப்பங்களில் இந்த முகாமிலேயே தங்கவைக்கப்படுகின்றனர். இந்த முகாமிலுள்ள குறைபாடுகள்பற்றி பல்வேறு அகதிகளுக்காக குரல் கொடுக்கும் நிறுவனங்கள் விமர்சனங்களை செய்தாலும் அவுஸ்ரேலியா அரசு இந்த முகாமை தொடர்ந்தும் உபயோகத்தில் வைத்திருக்கின்றது.

 

இந்த முகாம்கள்போன்று வேறுபல  தடை முகாம்கள் அவுஸ்ரேலியா nபுரும் நிலப்பரப்புக்கு வெளியிலும் உள்ளேயும் அமைக்கப்பட்டு இருக்கின்றன. எனவே அவுஸ்ரேலியாவிற்கு செல்பவர்கள் இந்த முகாம்களில் இருக்கவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளவேண்டியவர்களாத்தான் இருக்கவேண்டும்.

 

அவுஸ்ரேலியாவிற்கு  அகதி தஞ்சம்கோரி பயணித்தவர்கள் பற்றிய தகவல்கள் தெரியாமல் இருப்பவர்களுக்கும் தஞ்சம்கோரிய நிலையில் அவுஸ்ரேலியாவில் அல்லது அண்டைய நாடுகளில் அவதியுறுபவர்களுக்கும் எமது நிறுவனம் பல தரப்பட்ட சேவை களை செய்கின்றது. இதுபற்றிய மேலதிக விபரங்களை அறிய விரும்புவோர் எமது நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளவும்

 

 


Category: Tamil

About the Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>