சுவிஸ் அரசு தமிழர்களை திருப்பியனுப்புதல்.!

சுவிச்சலாந்து நாட்டில் நிராகரிக்கபட்ட இலங்கைத்த தமிழ் அகதிகளை வன்னி தவிர்ந்து மற்றைய பகுதிகளுக்கு திருப்பியனுப்ப முடியுமென்று அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து நெதலாந்து சுவிடன் போன்ற ஐரோப்பிய நாடுகளும் தமிழர்களை நாடு கடத்துவதற்கான முனைப்புக்கைளை எடுப்பதாக ஊடக செய்திகள் வெளிவந்தன.

கடந்த சில நாட்காளக எமது நிறுவனத்திற்கு பலர் அந்த நாடுகளிலிருந்தும் இலங்கையில் இருந்தும் தொலைபேசி அழைப் புக்கள் மின்அஞ்சல்வழி மூலமும் இந்த செய்திகள் தொடர்பாக எமது நிறுவனம் எவ்வகையான ஆலோசணைகளை தர முடியுமென கேட்டுக்கொண்டார்கள்.

எமக்கு வருகின்ற மின்னஞசல்களுக்கும் தொலைபேசி அழைப்புக்க ளுக்கும் இந்த விடயம் தொடர்பாக ஒவ்வாருவருக்கும் எமது ஆலோசணையை தனித்தனியே வழங்குவதற்கு முடியாமல் இருந்தாலும் எமது இணையத்தளத்தில் இதுபற்றிய தகவல்களை தருவதாக உறுதியளித்ததன்பேரில் இந்த விடயத்தில் பாதிப்படையலாம் என எதிர்பார்ப்பவர்களுக்கு சற்று பயனளிப்ப தற்காக சில தகவல்களை இங்கு தருகின்றோம்.

அகதி தஞ்சம்கோரி நிராகரிக்கப்பட்ட நிலையில் உள்ளவர்கள் ஒவ்வொருவருடைய தஞ்சக்கோரிக்கை விண்ணப்பமும் தனித்தனியே பரிசீலணைக்குள்ளாக்கப்பட்டு அதன் பின்பே நாடு திரும்புவதற்கு நிர்பந்திக்கப்படுவர்;. எனவே ஒவ்வொருவருடைய கோரிக்கை தொடர்பான மேலதிகமான ஆலோசணைகள் ஆளுக்கு ஆள் வேறுபடும். எனவே உங்கள் கோரிக்கை தொடர்பாக உங்களை பிரதிநிதித்துவம் செய்யும் சட்டதுறையுடன் சேர்ந்தவர்களின் ஆலோசணைகள் மிகவும் முக்கியமானது.

ஒரு தனிப்பட்ட அகதிக்குரிய சூழ்நிலையை முன்வைத்து நீதி மன்றம் முடிவுவெடுத்துள்ளது. இந்த முடிவு மற்றவர்களுடைய சூழ்நிலைக்கு பொருத்தமற்றதாக இருக்கலாம்.

சுவிஸ் நாட்டின் அதி உயர்ந்த சமஸ்டி நிர்வாக நீதிமன்றின் தீர்ப்புக்கு மேலாக தீர்ப்புக்கள் வழங்க முடியாது . ஆனால் இன்னுமொருவருடைய தீர்ப்பு இதற்கு எதிராகவும் அமையாலாம்.

சுவிஸ் நாட்டின் சமஸ்டி குடிவரவு விவகாரங்களுக்கு பொறுப்பான செயலகம் இந்த நீதிமன்ற முடிவை உடனடியாக நடைமுறைப்படுத்துமென நாம் எதிர்பார்க்கவில்லை. காரணம் சுவிஸ் நாட்டிலுள்ள பல்வேறு அமைப்புக்கள் இந்த நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக குரல் கொடுத்துக்கொண்டு இருக்கின்றர்ர்கள்.

இந்த நீதிமன்ற தீர்ப்பில் வன்னிப்பகுதியிலிருந்து அகதி தஞ்சம்கோரியோரை திருப்பியனுப்புவதில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென்றும் வன்னி தவிர்ந்த ஏனைய பகுதிகளில் குடிய மரக்கூடிய வசதிகள் இருந்தால் மாத்திம் இவர்களை திருப்பியனுப்ப வேண்டும் எனவும் பரிந்துரைக்கபபட்டுள்ளது. இந்த முடிவை தமிழ் அகதிகள் தங்களுக்கு சார்பாக துஸ்பிரயோகம் செய்துவிடுவார்களென்ற அச்சத்தையும் சமஸ்டி குவரவு விவகார செயலக அதிகாரிகள் வெளிக்காட்டியுள்ளதாக தெரிவருகின்றது.

சுவிஸ் நாடு ஐக்கியநாடுகள் அகதிகள் சாசனத்தில் கையெழுத்திட்டு சர்வதேச அகதிகள் சட்டங்களுக்கு மதிப்பளிக்கின்ற கடப்பாட்டை உடையது. தமிழர்களை திருப்பியனுப்பும்போது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட சூழல்; அவர்கள் சுவிஸ் நாட்டில் வாழ்நத காலம் என்பவற்றை கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம்.

எமக்கு கிடைக்கின்ற புள்ளவிபரங்களின்படி சுவிஸ் நாட்டில் சுமார் 42ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் வாழ்வதாகவும் இவர்களில் 15 ஆயிரம் பேருக்கு சுவிஸ் பிரஜா உரிமை வழங்கப்பட்டுள்தாகவும் கடந்த ஆண்டு முடிவில் சுமார் 2 ஆயிரம் தஞசம் கோரியோரின் விண்ணப்பங்கள் பரிசீலணையில் இருப்பதாகவும் தெரியவருகின்றது. சுவிஸ் அரசு எத்தனைபேரை நாட்டுக்கு திருப்பியனுப்ப முயற்சிக்கின்றது என்ற விடயம் எமக்கு உடனடியாக அறிய முடியாமல் இருக்கின்றது.

இந்த எண்ணிக்கை எதுவாக இருந்தாலும் சுவிஸ் அதிகாரிகள் திருப்பி அனுப்புவதை தீவிரப்படுத்தினால் அதை தடுப்பதற்கான ஒரேயொரு வழி தனிப்பட்ட ஒவ்வொருவருடைய சார்பிலும் நீதிமன்ற தீர்ப்பை பெறுவதற்கான முறையீடுகளை செய்வதே.

இவ்வாறு நிதிமன்ற விசாரனையை ஏற்படுத்தும்போது சுவிஸ் நாட்டு அரசு அதிகாரிகள் இலங்கையின் தற்போதைய சூழ்நிலை தமிழர்களை திருப்பியனுப்புவதற்கு பாதுகாப்பானதாக இருக்கினறது என்பதற்கு ஆதாரமாக பயன்படுத்தும் ஆவண மூலசான்றுகளை நீதிமன்றத்தில் சமர்பிக்க நிர்ப்பந்திக்கலாம். அப்போது அந்த சான்றுகளின் நம்பகதன்மையை நீதிமன்றம் பரிசீலனை செய்யலாம். அதேவேளை இலங்கையில் மனித உரிமைகள் பற்றி சுதந்திரமான தன்னார்வ நிறுவனங்களினால் தற்போது வெளியிடப்பட்டுள்ள ஆவணங்களை அரச அதிகாரிகளின் பொதுகொள்கைக்கு எதிராக நீதிமன்றில் பரிசீலிக்க சந்தர்ப்பத்தை ஏற்டபடுத்தலாம்

பொதுவாக அகதிகளை திருப்பியனுப்பும் விடயத்தில் ஐக்கிய நாடுகளுக்கான அகதிகள் உயர் ஸ்தானிகர் நிறுவனத்தின் (யூ.என்.எச் சீ.ஆர் – UNHCR) பரிந்துரைகளை அரசுகள் கவனத்திலெடுப்பது வழமை. ஆனால் இது கடப்பாட்டுக்குரியது இல்லை.

அண்மையில் இந்தியாவிலிருந்து சில குடும்பங்களை சேர்ந்தவர்களை நாடு திரும்புவதற்கு இந்த நிறுவனம் உதவியது. ஆனால் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியமை சுயமானமாது- அவர்களை எவரும் பலவந்தப்படுத்தவில்லை. சில சக்திகள் தங்களது சுய அரசியல் இலாபத்திற்காக இந்த நாடு திரும்புதலை ஊக்கு விப்பதாக அறியக்கிடக்கின்றது.

இவ்வகையான சுயமான நாடு திரும்புதல் மற்றைய நாடுகள் தமிழர்களை பலவந்த நாடு கடத்துதலுக்கு ஊக்குவிக்கும் கார ணியாகவும் அமையும்.

சுவிஸ் உட்பட மற்றைய ஐரோப்பிய நாடுகள் தமிழர்களை தீரப்பியனுப்பவது தொடர்பாக எமது நிறுவனம் கரிசனையுடன் செயல்படுகின்றது என்பதையும் எமக்கு கிடைக்கின்ற தகவல்களை எமது இணையத்தளத்தினூடக அவ்வப்போது வெளிக்கொண்டுவர முயற்சிக்கின்றோம் என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறோம்.


Category: Tamil

About the Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>