அண்மையில் ஈழ தமிழ் அகதிகள் சிலர் பெண்கள் குழந்தைகள் உட்பட படகு மூலம் அவுஸ்திரேலியா செல்வதற்கு முனைந்த போது இந்திய காவல் படையினால் கைது செய்யப்படதாக செய்திகள் வெளிவந்தன. அதனை தொடர்ந்து தமிழக ஊடங்களில் தமிழ் அகதிகள் முகாம்களை விட்டு மிகவும் அபாயகரமான உயிர்களை பணயம் வைத்து கடல் மார்க்கமான பிரயாணத்தை ஏன் தெரிந்து எடுக்கிறார்கள் என்பது பற்றி பல்வேறு கருத்துகள், விமர்சனங்கள் வெளிவந்தன

இந்த படகில் பயணமாக இருந்த சிலரையும் சில ஊடகங்கள் நேரடியாக பேட்டி கண்டு இருந்தன. அப்போது அவர்கள் கூறிய காரணம், முகாம்களில் பல வருடங்களாக எந்தவொரு முனேற்றம் இல்லாமல் எவ்வளவு காலத்திற்கு அகதிகளாகவே வாழ்வது என்றும் இலங்கைக்கு போகவும் முடியாமல் இந்தியாவில் எமக்கு ஒரு நிரந்தர வதிவிட உரிமையோ அல்லது இந்திய பிரஜா உரிமையோ இல்லாமல் எப்படி தொடர்ந்து முகாம்களில் அடைபட்டு கிடப்பது என்றும் தங்களது வேதனைகளை கூறினார்கள் அவர்களுடைய வேதனைகளில் நியாயமும் அந்த வேதனைகளுக்குரிய விடயங்களில் தீர்வு காணபடவேண்டியதன் அவசியம் பற்றியும் பல்வேறு கரிசணைகள் இப்போது பல்வேறு மட்டங்களிலும் வெளிகாட்டபடுகின்றன.

இந்த விடயம் தொடர்பாக நாம் செய்த சில ஆய்வுகளின் அடிப்படையில் இந்த கட்டுரையை இங்கு வெளியிடுகின்றோம். இந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்ட சில தரவுகளும் தகவல்களும் இராமேஸ்வரம் மண்டபம் அகதிகள் முகாமில் உள்ள அரச நிர்வாகிகளிடமும் அங்குள்ள அகதிகளிடமும் தமிழகத்தில் ஈழ அகதிகளுக்காக சேவை செய்யும் தன்னார்வ நிறுவனமான OFERR (ஈழம் அகதிகளுக்கான புனர்வாழ்வு கழகம் போன்றோகளிடம் இருந்து பெற்றுகொள்ளபட்டது.

இந்தியாவில் 132 முகாம்களில் சுமார் 80 ஆயிரம் தமிழ் அகதிகள் வாழ்வதாகவும் அவர்களில் தமிழ்நாடில் 112 முகாம்கள் இருபதாகவும் அதில் சுமார் 70 ஆயிரம் மக்கள் வாழ்வதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. முகாம்களுக்கு வெளியில் சுமார் 35 ஆயிரம் ஈழ தமிழ் அகதிகள் வாழ்வதாக இந்திய அரசின் கணிப்பீடுகள் இருந்தாலும் தமிழகத்தில் முகாம்களுக்கு வெளியில் வாழும் அகதிகளின் எண்ணிக்கை அதிகமானது என்றும் சுமார் 2 இலட்சம் ஈழ தமிழ் அகதிகள் இந்தியாவில் வாழ்வதாக சில அகதிகளுக்காக சேவை செய்யும் தன்னார்வ நிறுவனங்கள் நம்புகின்றன.

ஈழ தமிழ் அகதிகள் வாழ்கின்ற முகாம்களின் நிலைமைகள் தொடர்பாக பல்வேறு நிறுவனங்களினாலும் தனிபட்டவர்களினாலும் வெளியிடப்பட்ட அறிக்கைகளின்படி பொதுவாகவே குறைவான தரத்தில் (poor condition) இருப்பதாகவே தெரிவிக்கப்படுகின்றன.

ஒரு புறம் முகாம்களில் உள்ள வசதி குறைபாடுகள் மறு புறம் நிர்வாக மற்றும் பாதுகாப்பு கெடுபிடிகள் தங்களின் நாளாந்த சாதாரண இயல்பு வாழ்க்கையை நடத்துவதில் பெரும் கஷ்டங்களுக்கு முகம் கொடுப்பதாக முகாம்களில் வாழும் அகதிகள் கூறுகின்றார்கள்

அதே வேளை முகாம்களில் வாழும் அகதிகளுக்கு மத்திய மாநில அரசுகள் பொறுப்பானவர்கள். அதனால் அகதிகளின் நலன்களையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு சில நிர்வாக ஒழுங்கு முறைகள் கடைபிடிக்கபடுகின்றன. இவை எந்த வகையிலும் மக்களை கஷ்டத்துக்குள் உள்ளக்குவதர்க்காக கடைபிடிக்கப்படவில்லை என அகதிகள் நிர்வாகம் கூறுகின்றது

இலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியா தவிர்ந்த வேறு நாடுகளுக்கு சென்றவர்கள் நல்ல வசதியாகவும் தங்கள் உறவினர்களையும் அந்த நாடுகளுக்கு அழைத்து சந்தோசமாக வாழ்கிறார்கள். அந்த நாடுகளில் குடி உரிமையும் பெற்று வாழ்கிறார்கள். ஆனால் இதியாவில் அகதியாக வந்து சுமார் 25 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்தும் எமக்கு எந்த வித உரிமைகளும் இங்கு இல்லை. நாம் இலங்ககைகும் திரும்பி போக முடியாது. சாகும் வரை அகதிகளாகவே இந்த முகாம்களில் அடைபட்டு கிடக்க வேண்டுமா என முகாம்களில் வாழும் அகதிகள் தங்கள் வேதனையை கொட்டுகின்றார்கள்

இவர்களது வேதனைகளில் நியாயம் இருப்பதை உணரும் தமிழக அரசில் மற்றும் முக்கியஸ்தர்கள்  இலங்கை தமிழ் அகதிகள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் என்கிறார்கள்.

அதாவது ஒரு வறிய நாடிலிருந்து இன்னுமொரு வறிய நாட்டிற்கு அடைக்கலம் தேடி வந்திருக்கிறார்கள். தாங்கள் வாழ்ந்த நாட்டை விட இந்திய பெரிய பணக்கார நட்டு இல்லை. அனால் இங்கு வந்தவுடன் அவர்களுக்கு ஒரு நிம்மதி -அவர்களுக்கு உயிர் ஆபத்து கிடையாது. சிங்கள காக்கி சட்டை போட்ட இராணுவத்தின் பயம் இல்லை. தங்களது குழந்தைகளை கட்டாயபடுத்தி ஆயுத போராட்டத்தில் சேர்க்கப்படும் ஆபத்து இல்லை..

இவற்றை விட இதியாவில் பல மாநிலங்களில் முகாம்களில் வாழும் தமிழ் அகதிகளை விட மிக வறுமை கோட்டுக்கு கிழே வாழ்கின்றவர்கள் பல இலட்சம் இருக்கிறார்கள்.

தமிழ் நாட்டில் உள்ள முகாம்களில் உள்ள குறை பாடுகளை நிவர்த்தி செய்ய மாநில மத்திய அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து கொண்டுதான் இருகின்றன. இதற்க்கு மேலாக மற்றைய நாடுகளில் நிராகரிக்கப்பட்ட தமிழ் அகதிகளை பலவந்தமாக நாடு கடத்துவது போல் இந்தியா தமிழர்களை நாடு கடத்துவது இல்லை. இந்தியாவின் மனிதாபிமான கொள்கையான அகதிகள் தங்களுக்கு விரும்பினால் சுயமாக நாடு திரும்புவதை மாத்திரமே ஊக்குவிக்கின்றது

நாம் நேரடியாக முகாம்களில் நீண்ட காலமாக வாழ்ந்துவரும் மக்களிடம் சேகரித்த தகவல்களின் அடிபடையில் அகதி முகாம்களில் அவலப்படும் தமிழ் அகதிகள் ஏன் இலங்ககைக்கு திரும்பி செல்ல முடியாது என்பதற்கான அவர்களது கருத்துக்கள் இவ்வாறு இருந்தன.

பலர் தங்கள் வீடுகள் காணிகளை விட்டு வெளியேறிய பின்பு தொடர்ந்து இடம் பெற்ற யுத்தம் காரணமாக தங்கள் வீடுகள் சேதம் அடைந்து விட்டன. சில இடங்களில் தங்கள் வீடுகள் இருந்த இடங்கள் ஸ்ரீ லங்கா இராணுவத்தினால் அபகரிக்கப்படுள்ளன. பலருடைய வீடுகள் இருந்த இடங்களில் ராணுவ முகாம்கள் புதிதாக அமைத்து இருப்பதினால் அங்கு இனிமேல் குடியிருக்க முடியாது.

நாங்கள் தமிழ் நாட்டில் நீண்ட காலமாக வாழ்ந்து வருவதனால் எமது பிள்ளைகள் தமிழ் நாட்டு கல்வி வசதிகளை பெற்று சிலர் உயர் கல்வி படிக்கிறார்கள். இன்னும் பலர் தனியார் நிறுவனங்களில் தொழில் பார்கிறார்கள். முகாம்களில் வசதிகள் குறைவு என்பதற்காக நாம் திரும்பவும் கொலைகளம் என இப்போது வர்ணனிக்கபடும் இலங்கைக்கு சென்று நாங்கள் பயத்துடன் வாழ விரும்பவில்லை.

ஏற்கனவே சுயமாக நாடு திரும்பியவர்கள் பலரை திருகோணமலையில் ராணுவத்தால் சுற்றிவளைத்து கைது செய்ததாக செய்திகள் வெளிவந்தன. இந்த நிலையில் நாம் திரும்பி போகும் பட்சத்தில் எங்கள் உயிருக்கு உத்தரவாதம் தருவது யார் என்றும் கேட்டார்கள்

இவ்வாறான பின்புலத்தில், இலங்கையில் தமிழர்களுக்கான ஓர் நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை அகதிகள் முகாமில் உள்ளவர்கள் நாடு திருபுவதற்குரிய சாத்தியகூறுகள் மிக குறைவாகவே காணப்படுகின்றது.

அகதிகளுக்கான ஒரு நிரந்தர எதிர் காலம் இல்லாத சூழலில் அகதிகள் முகாம்களில் இருக்கும் பலர் அங்கிருந்து சந்தர்ப்பம் கிடைக்கும் போது வேறு நாடுகளுக்கு செல்வதற்கு முயற்சிப்பது தொடரும். இதன் போது இவர்களது நம்பிக்கை இழந்த நிலையை தங்களுக்கு சாதகமாக பாவித்து அதில் பணம் சம்பாதிக்க நினைக்கும் சிலர் இவர்களுக்கு ஆசை வார்த்தைகளை கூறி ஆவுஸ்த்ரேலியா போன்ற நாடுகளுக்கு அழைத்து போவதாக பெரிய அளவில் பணத்தை வாங்கி, நம்பி வந்தவர்களை பாதி வழியில் விட்டு செல்லும் அல்லது நீண்ட கடல் பயணத்தில் சேர வேண்டிய இடத்தை சென்று அடையாமல் கடலுக்கு பலியாகியும் வேறு நாடுகளில் சிறைகளில் அடைபட்டும் இருக்க வேண்டிய அவலத்தை காணக்கூடியதாக இருக்கும்.


Category: Tamil

About the Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>