பிரித்தானியாவில் 2015ல் ஒரு இலட்சம் வெளிநாட்டவர்கள்!
ஐக்கிய ராச்சியத்தில் குடிவரவுவரை வருடமொன்றுக்கு ஒரு லட்சம் பேர்களாக கட்டுபடுத்த திரு கமொரோன் பிரதமர் திட்டம் !
ஐக்கிய ராச்சியத்தில் தேர்தல் மேடை விவகாரமாக அண்மைய காலங்களில் முக்கியத்துவம் பெற்று வரும் வெளி நாட்டவர்களின் வருகை பற்றிய குடிவரவாளர் (Immigration ) பிரச்சனையில் தற்போதைய கோன்செர்வடிவே கட்சி ஓரளவு வெற்றி பெற்று வருவதை அண்மையில் வெளிவந்த குடிவரவு புள்ளி விபரங்கள் வெளிபடுதுகின்றன.
2012ம் ஆண்டு மொத்த குடிவரவாளர்களின் எண்ணிக்கை முன்னைய ஆண்டை விட சுமார் எண்பது ஆயிரத்தால் (80,000) வீழ்ச்சி அடைந்து உள்ளது. கடந்த பத்து வருடங்களில் முதல் முறையாக நடந்துள்ளது. இதில் முக்கியமாக மாணவர்கள் வருகை வெகுவாக வீழ்ச்சியடைதுள்ளது. 2010/11 வருட காலத்தில் 2,46,000 வெளிநாட்டு மாணவர்கள் இங்கு கல்வி பயில வந்தார்கள். இந்த ஆண்டு அதே கால பகுதியில் வந்தவர்களின் எண்ணிக்கை 1.90,000 ஆகும்.
வெளி நாடு மாணவர்களுக்கான கல்வி கட்டணம் அதிகரிப்பு, மாணவர்களுக்கான தொழில் வாய்ப்புகள் மற்றும் ஆதரவில் இருப்பவர்களின் (dependents ) வருகை போன்ற சலுகைகளில் கட்டுப்பாடு அறிமுகபடுத்தியது மாத்திரம் இன்றி வெளி நாட்டு மாணவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்கள் மீது குடிவரவு அதிகாரிகளின் அதிரடி சோதனைகளும் கண்காணிப்பு என்பன இந்த வீழ்ச்சிக்கு காரணமாக இருந்துள்ளன. அண்மைய காலங்களில் பல கல்வி நிறுவனகள் திடீர் திடிரன மூடப்பட்டன. போலியான கல்வி நிறுவனகள் மீது எடுக்கபட்ட கடும் நடவடிக்கைகள் காரணமாக, அந்த நிறுவனங்களை நம்பி கல்வி கட்டணம் செலுத்தி பணத்தை இழந்து மிகவும் கஷ்டங்களை முகம் கொடுத்த மாணவர்கள் பற்றிய தகவல்கள் வெளி நாடுகளில் உள்ளவர்களுக்கு தெரிய வந்ததை தொடர்ந்து, புதிய மாணவர்கள் இங்கு கல்வி பயில வருவது குறைந்ததும் இந்த வீழ்ச்சிக்கு காரணமாகும்.
திருமணம் முடித்தவர்கள் தங்களது கணவன் அல்லது மனைவியை அழைப்பதற்குரிய வருமான தொகையை குடிவரவு பகுதி அதிகரித்து நிர்ணயம் செய்துள்ளமை , குடும்பம் இணையும் அனுமதி பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் குறைத்து உள்ளது. அத்துடன் தொழில் புரியும் அனுமதி பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது.
வெளி நாட்டவர்களின் வருகை வீழ்ச்சி ஆளும் கொன்செர்டிவே கட்யின் பிரதமர் உட்பட குடிவரவுக்கு பொறுப்பான செயலாளர் திரசா மே அவர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. தங்களது ஆட்சியின் போது கொண்டு வந்த புதிய குடிவரவு கொள்கைகள் பலன் அளித்துள்ளன என்றும் 2015ம் ஆண்டளவில் குடிவரவாளர்கள் எண்ணிகையை ஒரு லட்சமாக கொண்டு வர முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்
Recent Comments