கடந்த 2007ம் ஆண்டு மார்ச் மாத்திற்கு பின்பு பிரித்தானியாவில் தஞ்சம் கோரிய நிலையில் நிராகரிக்ப்பபட்டவர்கள் சுமார் 4000க்கு மேற்பட்டவர்களின் எதிர்காலம் இந்த நாடடில் நிரந்நதரமாக வாழ்வதற்கு முடியாத கேள்விக்குறியான நிலையில் இருக்கின்றது.

 

2007ம்ஆண்டு மார்ச்மாதம் முதல் 2011 ஆண்டு ஜுலை வரையிலான காலத்தில் சுமார் 20000க்கு மேற்பட்ட இலங்கையர்கள் 44க்கும் மேலான நாடுகளில் தஞ்சம் கோரியுள்ளனர். இவர்களில் 18000க்கு மேற்பட்டவர்கள் இலங்கையில் யுத்தம் முடிவடைந்தபின்பு வெளியேறியுள்ளனர். சுமார் 5500க்கும்மேற்பட்டவர்கள் பிர்pத்தானியா விற்குள் தஞ்சம் கோரியுள்ளனர். இவர்களில் 1400வரையிலான வர்களுக்கே  பிரித்தானியாவில் இருப்பிட அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

 

அண்மைக்காலங்களிலிருந்து பிரித்தானியா குடிவரவு அதிகாரிகள் சட்டவிரோதமாக இருப்பவர்களை இலங்கைக்கு நாடுகடத்துவதற்கு புதிய உத்திகளை கையாண்டு வருகின்றார்கள். பிரத்தியேக விமானங்களை வாடகைக்கு ஒழுங்கு செயவதன்மூலம் குறைந்த அளவு சிரமங்களை மாத்திரம் எதிர்நோக்குகின்றார்கள். திருப்பி யனுப்படவேண்டிய ஒரு குறிபிட்ட அளவிலானவர்களை மிகவும் அவதானமாக எந்தவித ஆராவாரமின்றி ஒவ்வொருவருவராக  விமானம் புற்றபடவேண்டிய தினத்திற்கு சில நாட்களுக்கு முன்பே தடைமுகாம்களுக்கு கொண்டுசென்று தயார் படுத்திக் கொள்கின்றார்கள். நாடு கடத்தப்படுவர்களுக்கு தேவையான கடவுச்
சீட்டு போன்ற பத்திரங்களை பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் காரியாலம் மிகசெம்மையாக செய்துகொடுத்து ஒத்தழைக்கின்றது.

 

‘தஞ்சம் கோரிய ஒவ்வொருவருக்கும் நாம் இந்த நாட்டில் இருக்கின்ற சகல சட்டத்திலான வழிகளையும் தங்களுக்கு சார்பாக பயன்படுத்த நாம் அனுமதிக்கின்றோhம். தஞச்கோரியோர் எந்தவகையிலும் தொடர்ந்து இருக்க முடியாத நிலைமை வந்தவுடன்தான் நாம் அவர்களை தங்கள் நாட்டுக்கு தாங்களாகவே சுயமாக நாடு திரும்பும்படி ஊக்குவிக்றோம். அவ்வாறு போகாதவர்களை நாம பலவந்த நாடுகடத்துதலை செய்யவேண்டிய நிலலை ஏற்படுகின்றது’ என  குடிவரவு அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்படுகினறது.

 

1983ம் ஆண்டுக்கு பின்பு பிரித்தானியாவில் தஞ்சம்கோரி நிராகரிக்கபட்ட விண்ணப்பகாரர்களின் எண்ணிக்கை சுமார் 35000 க்கு மேற்பட்டதாக இருந்தாலும்  பிரித்தானியா அரசுகளினால் காலத்திற்கு காலம் அறிமுகப்படுத்திய பல்வேறு பொதுமன்னிப்பு வழங்கின்ற நடைமுறையினால் இவர்கள் தொடந்து நிரந்தரமாக வாழ்வ தற்குரிய சந்தர்ப்பத்தை பெற்றார்கள். அண்மையில் வழங்கப்பட்ட ‘நீன்டநாட்களாக தேக்கம் கண்ட தஞ்ம்கோரிய விண்ணப்பகாரர்களுக்கான பொதுமன்னிப்பு’ வழங்கும் அடிப்ப டையில் இலங்கையை சேர்ந்த சுமாh 25000க்க்கு மேற்பட்ட விண்ணப்பகார்களும் அவர்களது குடும்பத்தினரும் நன்மை யடைந்தார்கள். ஆனால் இவ்வாறான பொதுமன்னிப்பு வழங்கும் இன்னமொரு சந்தர்ப்பம் விரைவில் அறிமுகபபடுதப்படு;மா என்பதற்கு காலம்தான் பதில் அளிக்கும்.


Category: Tamil

About the Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>