இலங்கையில் இடம்பெற்றுவரும் மனித உரிமைமீறல்கள் தொடர்பான தகவல்களை ஆதாரபூர்வமான பத்திரங்களுடன் சேகரித்து  அந்த நிகழ்வுகளால்  நாடு திரும்பினால் உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுமென நம்பினால் அது தொடர்பான விபரங்களை  உங்கள் சட்டப் பிரதிநியூடாக குடிவரவு பகுதிக்கு தொடர்ந்து எழுத்துழூலம் தெரிவித்துக்கொண்டிருங்கள்.

 

 இலங்கை அரசின் யுத்தக்குற்றவாளி பற்றிய ஊடக செய்திகளோ அல்லது ஐ.நா. அறிக்ககைகள் உங்களை நாடு கடத்துவதிலிருந்து காப்பாற்றும் என்று நம்பாதீர்கள். ஆனால் அவைகள் உங்கள் சொந்த தஞசக்கோரிகைக்கு எவ்வாறு உடன்படுகின்றது  என்று பாருங்கள். அவ்வாறு அவை உடன்படுமானால் அதுபற்றிய நீதிமன்ற மேன்முறையீட்டுக்கு வழிவகுக்க உங்கள் சட்டபிரதிநிதியிடம் ஆலோசணை பெறுங்கள். அதைவிடுத்து இவற்றினால் ஒட்டுமொத்த நிராகரிக்கப்பட்ட தஞ்சம் கோரியோரையும் நாடுகடத்துவதிலிருந்து தடுத்துவிடலாமென எதிர்பார்க்காதீர்கள்.

 

 உங்கள் சட்டபிரதிநியுடன் நெருங்கிய தொடர்புடன் இருங்கள். உங்களுடைய தஞ்சக்கோரிக்கை தொடர்பாக குடிவரவுப்பகுதியின் தீர்மானங்களை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள் முக்கியமாக தங்களது இருக்கையை கையெழுத்து இடுவது மூலம் உறுதிப்படுத்திக் கொண்டிருப்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். குடிவரவு பகுதியி;ல் உங்கள் சார்பில் ஏதாவது விண்ணப்பம் பரிசீலணைக்கு காத்திருக்கவில்லையென்றால் நீங்கள் கையெழுத்து இடுவது தொடர் பாக உங்கள் சட்டப்பிரதியுடன் ஆலோசணைகளை பெறுங்கள்.

 

 உங்கள் தஞ்சக்கோரிக்கை தொடர்பாக எல்லாவிதமான சட்டப்படியான பரிசீலணைகள் யாவும் முடிவடைந்த நிலையில் இனிமேல் இந்த நாட்டில் இருப்பதற்கு எந்தவித வழியும் இல்லையென்ற நிலையில் இருக்கும்போது குடிவரவுசட்டங்களுக்கு புறம்பான விதிகளுக்கு உட்பட்டமுறையில் நீங்கள் இந்த நாட்டில் தொடர்ந்து இருப்பதற்கு அணுமதிகேட்டு ஒர் விண்ணப்பத்தை செய்வதுபற்றி உங்கள் சட்டப்பிரதியுடன் ஆலோசணை பெறுங்கள். இந்த விண்ணப்பம் மனிதாபிமான அடிப்படையில் குடிவரவு விதிகளுக்கு புறம்பாக குடிவரவு செயலாளரினால் பரிசீலணை செய்யப்படும் முறையாகும்.

 

இந்த நடைமுறை மனித உரிமை சட்டத்திலுள்ள சரத்துகளை பயன்படு;த்தி மேலதிக விண்ணப்பம் செய்யும் நடைமுறையிலிருந்து முற்றிலும்  வேறுபட்டது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.


Category: Tamil

About the Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>