குடிவரவு செயலாளருக்கும நீதித்துறை செயலாள ருக்கும் இடையில் இடம்பெற்ற  ஒரு சுவையான  மனிதஉரிமை பூனைக் கதை

 

அண்மையில் இடமபெற்ற 2011க்கான ஆளும் கொன்சேர்ட்டிவ் கட்சியின் வருடாந்த மகாநாட்டில் உரையாற்றிய குடிவரவு செயளலாளர்  திருமதி திறேசா மேய் அவர்கள் மனித உரிமைகளைசட்டத்தை பிரத்தானியா சட்டங்களில் இருந்து அகற்றுவது தொடர்பாக தெரிவித்தார். அவருடைய உரையில் ஒரு சட்டவிரோத குடிவரவாளரை நாடுகட்துவதற்கு எதிராக பிரித்தானியாவின் மேல்முறையீட்டு நிதிமன்றம் தீர்ப்பளித்தற்கு காரணம் அந்த சட்டவிரோத குடிவரவாளரினால் வளர்க்கப்ட்ட பூனையொன்றை மனித உரிமைகள் சட்டத்தின்பிரகாரம் பிரிக்க முடியாதென்பதுதான் என்று குறிபிட்டார். இதை தான் உருவாக்கிய கதை இல்லையென்றும் மேலும் குறிப்பி;டடார்.

 

இவரை தொடர்ந்து மகாநாட்டில் உரையாற்றிய நீதித்துறையின் செயளாலரான திரு கென்னத் கிளாக் அவர்கள் திருமதி திறேசாவின் உரைக்கு எதிராக தனது கருத்தை வெளிவிட்டதுடன் அங்கு கூறப்பட்ட பூனைக்கதையை பற்றி குறிப்பிட்டர். நான் அறிந்தவரை பிரத்தானியாவில் எந்தவொரு நீதிமன்றத்திலும் இவ்வான தீர்ப்பொன்றை வழங்கியதாக தனக்கு தெரியாதென்றும் திருமதி திறேசா அவர்கள் கூறியதை நீருபிக்க வேண்டுமென்றும் அதற்காக அவருடன் ஒரு பந்தயத்தையும் போடுவதாக நகைச்சுவையாக கூறினார்.

இந்தவிடயம் தொடர்பாக பிரதமர் காரியாலத்திலும் அமைச்சர்கள் கூட்டத்திலும் பிரஸ்தாபிக்கப்பட்டது. அப்போது திரு கென்னத் கிளாக் அவர்களின் பந்தயம் தொடர்பாக கதை;துக்கொண்டார்கள். இந்த பிரச்சனைக்கு முடிவுககு; கொண்டுவரும் நோக்குடன் பிரதமர் திரு டேவிட் கமறோன் அவர்கள் மிக நகைசுவையுடன் நீதிபதியினால் வழங்கப்பட்ட அந்த தீhப்பை பற்;றிய விபரங்கள் புனையினின் நகங்களினால் கீறி அழிக்கபட்டு விட்டது என்று கூறி  அந்த பூனைக்கதையை முடிவுக்கு கொண்டுவந்தார்.

 

இந்த பூனைக்கதை பற்றிய உண்மை என்ன?

வொலிவியா நாட்டை சேர்ந்த ஒருவர் பிரத்தானியாவில் கல்வி கற்பதற்காக மாணவர்களுக்குரிய விசாவை பெற்றுக்கொண்டு 2002 அண்டு இங்கு வந்தார். இவர் இங்கு இருப்பதற்கு 2004ம் ஆண்டுவரை அனுமதி வழங்கப்பட்டது. இதன்பின்பு சட்டவிரோதமாக இங்கு தங்கிவிட்டர். 2007ம் ஆண்டில் கடையொன்றில் திருடினார் என்ற பெயரில் இவர் கைது செய்யப்பட்டபேது சட்டவிரோதமாக இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து இவரை நாடு கடத்துவதற்கான யெற்பாடுகளில் குடிவரவுத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். இதற்கு எதிராக  நீதிமன்றில் தொடரபட்ட வழக்கில் மனித உரிகைள் சட்டத்தின் ஒரு சரத்தின்பிர்காரம் இவர் தனது மனைவியுடன் நீண்ட கால வாழ்க்கையை  நடாத்துகின்றவர் என்றும் அவரை குடும்ப வாழ்க்கையில் இருந்து பிரித்து நாடுகடத்தத முடியாதென இந்த சட்டவிரோத குடிவரவாளரின் சட்டவல்லுணர்;; வாதாடினார் இவர்கள் நீணடகாலம் ஒன்றாக வாழந்;தார்கதென்பதற்கு பல ஆதாரங்கள் நிதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டன. அதில் ஒன்று அவர்களினால் செல்லமாக வளர்க்கப்பட்ட  இந்த பூனையொன்று. இறுதியில் அவரின் நாடுகடத்துதலுக்கு எதிராக தீர்ப்ப வழங்கப்பட்டு நிரந்தரமாக சட்டபடி வாழ்கை நடாத்துகின்றார். எனவே  பூனை வளர்க்கப்பட்டதினால்தான் அந்த தீர்ப்பு வழங்கப்படவில்லையென்பதும் அவரின் சாhபில் வழங்கப்பட்ட பலவிதமான சன்றுகளில் இந்த புனையும் ஒன்று என்பதும்தான் இந்த பூனைக்கதையின் உண்மை.

 

 


Category: Tamil

About the Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>