இலங்கையிலிருந்து தஞ்சம் கோரும் நோக்குடன்
புலம்பெயர்கின்றவர்களுக்கு சில பயனுள்ள
தகவல்கள்.

 அகதி தஞ்சம் கோருவது ஒரு மனிதனுடைய அடிப்படை உரிமை. இன மத மொழி பேதமின்றி எவரும் எந்த நாட்டிலும எப்போதும்; அகதி தஞ்சம் கோரமுடியும் என்பதை சர்வதேச சட்டங்கள் உறுதிப்படுத்துகின்றன.

 

 இலங்கைவாழ் மக்களை பொறுத்தவரை யுத்தம் முடிவடைவதற்கு முன்போ அல்லது யுத்தகாலத்திலோ அல்லது தற்போது யுத்தம் முடிவடைந்த பின்போ அகதி தஞ்சம் கோருவதற்கு எவ்வித கட்டுப்பாடும் இருந்ததும் இல்லை இப்போதும் இல்லை.

 

 சிலர் கூறுவதுபோல் இலங்கையில் யுத்தம் முடிவடைந்ததினால் தஞ்சம் நிராகரிக்கப்படுவதற்கு சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளன என்பதில் எவ்வித உண்மையும் இல்லை.

 

 ஏனெனில் 1983ம் ஆண்டு முதல் யுத்தம் முடிவடையும் காலம் வரை உலக நாடுகளில் அகதி தஞ்சம் கோரியவர்களின் மொத்த விண்ணப்பங்களில் 60 வீதம் வரையிலானவை நிராகரிகப்ப்பட்டன என்ற உண்மை பலருக்கு தெரிந்து இருக்கவில்லை.

 

 அகதி அந்தஸ்து வழங்கப்படுவது என்பது வௌ;வேறு நாடுகளில் தங்களது உள்நாட்டு சட்டதிட்டங்களுக்கு ஏற்ப கையாளும் தன்மைகள் நாட்டுக்கு நாடு வேறுபட்டதாக இருந்தாலும்- சர்வதேச அகதிகள் சாசனத்தில் கையெழுத்திட்ட பல ஜரோப்பிய நாடுகளும் கனடா- அவுஸ்ரேலியா – நியூசிலாந்து போன்றவை சர்வதேச சட்டங்களுக்கு ஏற்பதாகவே செயல்படுகின்றன.

 

 அகதிகள் விண்ணபங்களை பரிசீணைசெய்யும்போது ஒவ்வொரு நாட்டிலும் இலங்கையருக்கான ஒரு பொதுவான கொள்கையை கடைபிடித்ததாகவில்லை. அதாவது இலங்கையின் ஒரு இனத்து மக்களுக்கு அல்லது முழு இனத்திற்கும் உயிராபத்து உள்ளது அதனால் அவர்களுக்கு அகதி அந்தஸ்த்து வழங்கப்பட வேண்டுமென்று இதுவரை எந்ந நாடுகளுமே ஏற்றுக் கொண்டது இல்லை.

 

 தஞ்சம் வழங்கும் 40க்கும் மேற்பட்ட உலக நாடுகள் தன்pப்பட்ட ஒவ்வொருவருடைய தஞ்சக்கோரிக்கைகளையையும் பரிசீலணை செய்து அதன் தகுதி அடிப்படையில்தான் அகதி அந்தஸ்த்து- அல்லது மனிதாபிமான அடிப்படையில் இருப்பிட அனுமதி வழங்கி வருகின்றன.

 

 அதே அடிப்படையில்தான் தற்போதும் அதாவது இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுற்ற போதும் தனிப்பட்டவர் விண்ணப்பங்களின் தகுதி அடிப்படையில் பரிசீலணை செய்யப்படுகின்றன.

 

 எனவே தற்போதும் அந்த தகுதி அடிப்படையில் இலங்யைருக்கு அகதி அந்தஸ்த்து அல்லது வேறு மனிதாபிமான அடிப்படையில் இருப்பிட அனமதி வழங்கப்ட்டுக் கொண்டுதான் இருக்கின்றது என்ற உண்மையை தெரிந்து கொள்ளவேண்டும்.

 

 எனவே இலங்கையில் இருந்து தஞ்சம்கோரும் நோக்குடன் இலங்கையை விட்டு வெளியேற முன்பு இந்த தகுதிகள்பற்றி ஒருவரும் தெரிந்து கொள்வதுடன் அவை தங்களுக்கு உள்ளனவா என அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

 

 எவ்வகையான தகுதிகள் அப்படையில் இருப்பிட அனுமதிகள் வழங்கப்படுகின்றன என்பது அவை நாடுகளுக்கு நாடு எவ்வாறு மாறுபடுகின்றன என்பது ஒவ்வொருக்கம் தங்களது சூழ்நிலைகளுக்கு ஏற்ப தீர்மானிக்கப்படுபவையாகும்.

 

 எனவே இவற்றை கவனத்தில் எடுத்துக்கொண்டு ஆலோசணை பெறவிரும்புவோர் எமது நிறுவனத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள ஊக்கப்படுத்துகிறோம்

 

 எமது நிறுவனம் மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பதை மாத்திரமின்றி அதன் செயற்பாடுகளையும் வெளிப்படையாகவே செய்துவருகின்றது.

 

 தஞ்சம்கோருவோர் தொடர்பான சட்டங்களை, சர்வதேச அகதிகள் சாசனத்தில் கையெழுத்திட்ட நாடுகள் மதிக்கவேண்டுமென்பதிலும் கையெழுத்திடாத நாடுகள் சர்வதேச மனித நலன்களை மதிப்பளிக்கும் சர்வதேச சட்டங்களை மதிக்க வேண்டுமென்பதிலும் எமது நிறுவனம் தனிப்பட்ட முறையிலும் எமது கொள்கையுடன் ஒன்றிணைகின்ற அரச, அரச சார்பற்ற- தனியார் நிறுவனங்களுடன் கைகோர்த்து இயங்கின்றது என்பதை பெருமையுடன் தெரியப்படுத்திக் கொள்கின்றோம்.

 

 கே.எஸ்.நாதன் அன்ட கம்பனி அகதிகளையும் குடிவரவாளர்களையும் தங்கள் புலம்பெயர் செயல்பாடுகளுக்கு ஊக்குவிக்கும் அதேவேளை அவர்கள் எந்தவொரு நாட்டிலும் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக நடாத்தப்பட வேண்டுமென்று முழுமூச்சாக இயங்கும் ஒரு சர்வதேச சட்டத்துறையாளர் நிறுவனமாகும்.

 

புலம்பெயர்ந்தோர் பலவந்தமாக நாடுகடத்தப்படுதல்!

 

இலங்கையிலிருந்து பல்வேறு நாடுகளில் அகதி தஞ்சம்கோரி அல்லது வௌ;வேறு வகையான விசா அனுமதிகளுடன் புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் சட்டரீதியான இருப்பிட அனுமதி மறுக்கபட்ட பின்போ அல்லது இருப்பிட அனுமதிகள் காலவதியானோலோ அவர்களாகவே அந்த நாடுகளை விட்டு சுயமாகவே நாடு திரும்பிவிட வேண்டுமென்று அந்த நாட்டு அரசுகள் எதிர்பார்க்கின்றன.

 

ஆனால் இந்த எதிர்பார்ப்பை பெருவாரியானவர்கள் நிறை வேற்றுவது இல்லை. சட்டவிரோதமாகவது அந்த நாடுகளிலேயே இருந்துவிடபார்ப்பதுதான் அவர்களது எதிர்பாப்பாகும்.

 

இவ்வாறானவர்களை தாங்கள் நாட்டிலிருந்து வெளியேற்றுவதில் நாட்டுக்கு நாடு வௌ;வேறான கொள்கைகளையும்- அணுகுமுறைகளையும் கொண் டிருக்கின்றன. சட்டவிரோத புலம்பெயர்ந்தவர்களை நாடுகடத்துவதில் சில நாடுகள் மந்தமான போக்கையும் மற்றவை மிகவும் கடினமான போக்கையும் கொண்டிருக்கின்றன.
புலம்பெயர்ந்தவர்களை அரவணைப்பதில் தாராளமான போக்கையுடைய நாடுகளும் சில சந்தர்ப்பத்தில் தங்கள் நாடுகளில் ஏற்படுகின்ற அரசியல் பொருளாதார சமூக மாற்றங்களுக்கு ஏற்ப தமது கொள்கைகளில் மாற்றங் களையும் கொண்டுவருகின்றன.
வெளிநாட்டவர்களின் வருகையினால் தங்களது நாடுகளில் பொருளாதார வளர்ச்சி ஏற்படுகின்றது என்ற வாதத்தை முன்வைக்கும் அதே நாடுகள் இனங்களுடனான ஒற்றுமை- சட்டம் ஒழுங்கு சீரழிவதற்கு காரணமாக இருப்பதாகவும் வாதிடுகிறன.

 

பல நாடுகள் புலம்பெயர்ந்த நிலையில் சட்டவிரோதமாக தங்கியிருப் பவர்களை பலவந்தமாக நாடுகடத்துவதைவிடுத்து பகிரங்க மன்னிப்பு அளிப்பதன்மூலம் தங்களது நாட்டுப்பிரைஜைகளாக ஏற்கும் செல்களும் இடம் பெறுகின்றன.

 

பல ஐரோப்பிய நாடுகளிலும் கனடா- அமெரிக்கா- அவுஸ்ரேலியா- நியூசிலாந்து போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்த நிலையில் சட்டவிரோதமாக வாழுபவர்கள் தங்கள் இருப்பை சட்டதிற்கு உட்பட்டதாக்கிக் கொள்ளவும் பல வழிகள் காணப்படுகின்றன. அவை தனிப்பட்டவர்களின் சூழலுக்கும் அந்த நாட்டு உள்ளுர் குடிவரவு மற்றும் சாவதேச மனித உரிமைகள் சட்டங்கள் போன்றவற்றுக்கும் ஏற்ப வேறுபடுகின்றன.

 

அண்மைக்காலமாக உலக நியதியில் மிகவும் இறுக்கமாக ஊண்றிப்போன பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற கோட்பாட்டின் அடிபபடையில் உள்ளுர்சட்டவரைகளுக்கு அல்லது சர்வதே சட்ட நியதிகளுக்கு மதிப்பளியாது குற்றச்செயல்களில் ஈடுபடுகின்ற எந்தவொரு குடிவர வாளர்களையும் மேலைத்தேய நாடுகள் வரவேற்க தயார் இல்லை என்ற உண்மையயை நாம் முழுமையாக அறிந்திருக்கவேண்டும்.

 

பிரித்தானியா போன்ற பல ஐரோப்பிய நாடுகள் சிறு குற்றங்கள் புரிந்த வர்கயையும் நாடுகடத்தும் பட்டியலில் சேர்த்துக்கொள்கின்ற தன்மையை காணலாம்.

 

இவ்வகையான சந்தர்ப்பங்களில் எமது நிறுவனம் தேவையான சட்ட ஆலோசணைகளையம் செயற்பாட்டு உதவிகளையும் வழங்க காத்திருக் கின்றது.


Category: Tamil

About the Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>